'பெரிய விலை கொடுத்த அனந்தகுமார் ஹெக்டே'
'பெரிய விலை கொடுத்த அனந்தகுமார் ஹெக்டே'
'பெரிய விலை கொடுத்த அனந்தகுமார் ஹெக்டே'
ADDED : ஜூன் 24, 2024 05:08 AM

தார்வாட் : ''அரசியலமைப்பு பற்றி பேசியதால், அனந்த குமார் ஹெக்டே, பெரும் விலை கொடுக்க வேண்டியிருந்தது,'' என பா.ஜ., - எம்.எல்.ஏ., அரவிந்த் பெல்லத் தெரிவித்தார்.
தார்வாடில் நேற்று அவர் அளித்த பேட்டி:
முன்னாள் மத்திய அமைச்சர் அனந்த குமார் ஹெக்டே, எந்த சூழ்நிலையில், அரசியல் சட்டத்தை மாற்ற வேண்டும் என்று பேசினார் என்று தெரியவில்லை. இதனால் அவர், பெரிய விலை கொடுக்க வேண்டியிருந்தது.
அரசியல் சட்டத்தை மாற்ற வேண்டும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே, அவர் பேசி உள்ளார். இதை காங்கிரஸ் தலைவர்கள் பிரச்னையாக்கி உள்ளனர்.
நமது அரசியல் சட்டத்தில் 106 திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. இதில், 370வது சட்டமும் அரசியல் சாசனத்தின் ஒரு பகுதியாக உள்ளது.
இவ்வாறு அவர்கூறினார்.