குழந்தைகளை சித்திரவதை செய்தவர் மீது வழக்கு
குழந்தைகளை சித்திரவதை செய்தவர் மீது வழக்கு
குழந்தைகளை சித்திரவதை செய்தவர் மீது வழக்கு
ADDED : ஜூலை 13, 2024 08:19 PM
மஹராஜ்கஞ்ச்:உத்தர பிரதேச மாநிலம், மஹராஜ்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுதர்சன். இவருக்கு சொந்தமான தோட்டத்தில், மூன்று குழந்தைகள் மாம்பழங்கள் பறித்து சாப்பிட்டனர். அதைப் பார்த்து ஆத்திரம் அடைந்த சுதர்சன், மூவரையும் மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினார். மேலும், மூவரின் வாயிலும் மாம்பழங்களை திணித்து சித்திரவதை செய்துள்ளார்.
இந்தக் காட்சிகளை அங்கிருந்த சிலர், மொபைல் போனில் 'வீடியோ' எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். அது வேகமாக பரவியது. இந்தக் காட்சிகளைப் பார்த்த ஏராளமானோர் சுதர்சனுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து அறிந்த மஹாராஜ்கஞ்ச் போலீசார், சுதர்சன் மீது வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.