ராகுலை விமர்சித்த பா.ஜ., --- எம்.எல்.ஏ., மீது வழக்கு
ராகுலை விமர்சித்த பா.ஜ., --- எம்.எல்.ஏ., மீது வழக்கு
ராகுலை விமர்சித்த பா.ஜ., --- எம்.எல்.ஏ., மீது வழக்கு
ADDED : ஜூலை 11, 2024 06:05 AM

மங்களூரு, : லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலை தரக்குறைவாக பேசியதாக, மங்களூரு வடக்கு பா.ஜ., -- எம்.எல்.ஏ., பரத் ஷெட்டி மீது வழக்குப் பதிவாகியுள்ளது.
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவர் காங்கிரஸ் எம்.பி., ராகுல். சில தினங்களுக்கு முன்பு, லோக்சபாவில் பேசும்போது, சிவனின் புகைப்படத்தை காட்டி பேசியதுடன், பிரதமர் நரேந்திர மோடி, 'முழு ஹிந்து சமூகம் இல்லை' என கூறியிருந்தார்.
ஹிந்துகளை விமர்சித்துப் பேசியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதற்காக ராகுலை கண்டித்து 6ம் தேதி, மங்களூரில் பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் மங்களூரு வடக்கு பா.ஜ., -- எம்.எல்.ஏ., பரத் ஷெட்டி, 'ஹிந்துக்களை விமர்சித்து பேசிய ராகுலை, லோக்சபா கதவை பூட்டிவிட்டு கன்னத்தில் அறைய வேண்டும். சிவனின் புகைப்படத்தை காட்டிப் பேசுகிறார். சிவனின் நெற்றிக்கண் திறந்தால், அதில் எரிந்து சாம்பலாகி விடுவோம் என்று கூட தெரியவில்லை. அவரது பேச்சு பைத்தியக்காரத்தனமாக உள்ளது' என பேசியிருந்தார்.
இந்த பேச்சு தொடர்பாக, பரத் ஷெட்டி மீது காவூர் போலீஸ் நிலையத்தில், மங்களூரு மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் அனில் குமார், நேற்று முன்தினம் புகார் செய்திருந்தார்.
இதன்பேரில் பரத் ஷெட்டி மீது நேற்று போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.