ஊடக அகாடமி தலைவராக ஆயிஷா கானம் நியமனம்
ஊடக அகாடமி தலைவராக ஆயிஷா கானம் நியமனம்
ஊடக அகாடமி தலைவராக ஆயிஷா கானம் நியமனம்
ADDED : ஜூலை 11, 2024 05:59 AM

பெங்களூரு : கர்நாடக ஊடக அகாடமி தலைவராக, மூத்த பத்திரிகையாளர் ஆயிஷா கானத்தை நியமித்து, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. முதன் முறையாக பெண்ணுக்கு, இப்பதவி கிடைத்துள்ளது.
கர்நாடக ஊடக அகாடமி தலைவராக, மூத்த பத்திரிகையாளர் ஆயிஷா கானம் என்பவரை, மாநில அரசு நியமித்துள்ளது. இதுவரை எந்த அரசுகளும், ஊடக அகாடமிக்கு பெண்ணையோ, சிறுபான்மையினரையோ நியமித்தது இல்லை. முதன் முறையாக, சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு நியமித்துள்ளது.
மூத்த பத்திரிகையாளரான ஆயிஷா கானமுக்கு, 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடக துறையில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. 'தி ஏஷியன் ஏஜ், ஸ்டார் நியூஸ், அஜ் தக், துார்தர்ஷன்' என பல்வேறு ஊடகங்களில் செய்தியாளராக பணியாற்றியுள்ளார்.
கர்நாடக ஊடக அகாடமிக்கு, யாரை தலைவராக நியமிப்பது என, ஆலோசனை நடந்தபோது, முதல்வரின் ஊடக ஆலோசகர் பிரபாகர், ஆயிஷா கானமின் பெயரை சிபாரிசு செய்தார்.