Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ டாக்டர் அலட்சியம் சிறுவன் உயிரிழப்பு

டாக்டர் அலட்சியம் சிறுவன் உயிரிழப்பு

டாக்டர் அலட்சியம் சிறுவன் உயிரிழப்பு

டாக்டர் அலட்சியம் சிறுவன் உயிரிழப்பு

ADDED : ஜூன் 07, 2024 07:22 AM


Google News
சம்பங்கிராம்நகர்: பெங்களூரின் சம்பங்கிராம் நகரில் வசித்தவர் ஆடன் மைக்கேல், 7. இவருக்கு உணவு சாப்பிடும் போது, தொண்டையில் வலி ஏற்பட்டது. எனவே அவரை பெற்றோர், இங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிறுவனை பரிசோதித்த டாக்டர், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார்.

நேற்று காலை அறுவை சிகிச்சைக்காக, டாக்டர் ஸ்வேதா பை என்பவர், சிறுவனுக்கு மயக்க மருந்து கொடுத்தார். அளவுக்கு அதிகமாக மயக்க மருந்து கொடுத்ததால், சிறுவன் உயிரிழந்தார். ஆனால் இந்த விஷயத்தை, பெற்றோரிடம் டாக்டர்கள் கூறவில்லை. மாறாக சிறுவனுக்கு இதய பிரச்னை இருப்பதாக நாடகமாடினர்.

சந்தேகமடைந்த பெற்றோர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார், மருத்துவமனைக்கு வந்து விசாரித்த போதுதான், சிறுவன் உயிரிழந்தது தெரிந்தது. மயக்க மருந்து கொடுத்த பின், மூன்று ஊசி போட்டனர். மயக்க மருந்து 'ஓவர் டோஸ்' ஆனதால், மகன் இறந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டினர்.

டாக்டர்களின் அலட்சியத்தால், இச்சம்பவம் நடந்துள்ளது. நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்தனர். புகார் பதிவானதும், டாக்டர் ஸ்வேதா தப்பியோடி விட்டார். அவரை போலீசார் தேடுகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us