பலியான பெண் உடல் விமானத்தில் வருகிறது
பலியான பெண் உடல் விமானத்தில் வருகிறது
பலியான பெண் உடல் விமானத்தில் வருகிறது
ADDED : ஜூன் 07, 2024 07:23 AM
உத்தரகண்டில் டிரெக்கிங் சென்று, உயிரிழந்த உத்தரகன்னடாவை சேர்ந்த இளம் பெண்ணின் உடல், விமானத்தில் கொண்டு வரப்படுகிறது.
உத்தரகண்டின், சஹஸ்த்ரால் மலைக்கு 23 பேர் டிரெக்கிங் சென்றனர். அங்குள்ள சீதோஷ்ண நிலையால் பாதிப்படைந்து, கர்நாடகாவின் 4 பேர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.
இவர்களின் உடல்களை 'சார்ட்டர்டு பிளைட்' மூலம், பெங்களூருக்கு அனுப்புவது குறித்து, உத்தரகண்ட் தலைமை செயலருடன், கர்நாடக அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா ஆலோசனை நடத்தினார்.
ஆனால் சார்டர்டு பிளைட் கிடைக்காததால், நேற்று டேராடூனில் இருந்து, டில்லியில் இருந்து விமானத்தில், பெங்களூருக்கு கொண்டு வரும் வாய்ப்புள்ளது.
இறந்தவர்களில் உத்தரகன்னடா, சிர்சியின் ஜாகனஹள்ளியில் வசிக்கும் பத்மினி ஹெக்டே, 35, என்பவரும் ஒருவர்.
இவர் பெங்களூரில், கூகுள் நிறுவனத்தில் பணியாற்றினார். ஜூன் 7 வரை டிரெக்கிங் செய்ய அனுமதி பெற்றிருந்தார்.
ஜூன் 4ல் மும்பையில் உள்ள தன் தாயுடன் பேசிஉள்ளார்
- நமது நிருபர் -.