ஒடிசா சட்டசபைக்கு முஸ்லீம் பெண் எம்.எல்,ஏ, முதன்முறை தேர்வு
ஒடிசா சட்டசபைக்கு முஸ்லீம் பெண் எம்.எல்,ஏ, முதன்முறை தேர்வு
ஒடிசா சட்டசபைக்கு முஸ்லீம் பெண் எம்.எல்,ஏ, முதன்முறை தேர்வு
ADDED : ஜூன் 08, 2024 08:01 PM

புவனேஸ்வர்: ஒடிசா சட்டசபை தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக பா.ஜ., ஆட்சியை பிடித்துள்ளது. அதேபோன்று காங்., சார்பில் முஸ்லீம் பெண் எம்.எல்.ஏ., ஒருவரும் தேர்வு செய்யப்பட்டு அரசியல் வரலாற்றில் முதன் முறையாக இடம் பெற்றுள்ளார்.
நடந்து முடிந்த ஒடிசா சட்டசபை தேர்தலில் பா.ஜ., தனித்து போட்டியிட்டு 147 க்கு 78 இடங்கள் வென்று அறுதிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இதன் மூலம் நவீன் பட்நாயக்கின் 24 ஆண்டு கால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
அதே நேரத்தில் சட்டசபைக்கு முதன் முறையாக முஸ்லீம் பெண் ஒருவர் எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஒடிசாவின் பாராபதி கட்டாக் தொகுதி வேட்பாளராக காங்., கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டவர் சோபியா பிர்தவுஸ். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளர் பூர்ண சந்திர மகாபத்ராவை 8,001 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
32 வயது இளம் எம்.எல்.ஏ.வான சோபியா பிர்தவுஸ் அரசியல் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தவராவார். இவரது தந்தை ஒடிசா காங்., கட்சியின் மூத்த தலைவரான முகமது மொகிம் ஆவார்
சோபியா பிர்தவுஸ் கலிங்கா இன்ஸ்டிடியூட்டில் இன்டஸ்டிரியல் டெக்னாலஜிபடிப்பை முடித்து பெங்களூவில் ஐ.ஐ.எம் படிப்பையும் முடித்துள்ளார்.
கடந்த 2023-ம் ஆண்டில் இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (கிரிடாய்) புவனேஸ்வர் பரிவின் பெண்கள் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் கிரிடாய் மகளிர் பிரிவின் கிழக்கு மண்டல ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். மேலும் இந்திய பசுமை கட்டட குழுவின் புவேனேஸ் பிரிவின் இணை தலைவராகவும் இருந்து வருகிறார்.
கடந்த 1972-ம் ஆண்டில் முதன் பெண் முதல்வரான நந்தினி சத்பதி போட்டியிட்ட இதே தொகுதியில் தற்போது சோபியா பிர்தவுஸ் போட்டியிட்டு வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.