பிரதமர் பதவியேற்பு விழா: மம்தா புறக்கணிப்பு
பிரதமர் பதவியேற்பு விழா: மம்தா புறக்கணிப்பு
பிரதமர் பதவியேற்பு விழா: மம்தா புறக்கணிப்பு
UPDATED : ஜூன் 08, 2024 07:46 PM
ADDED : ஜூன் 08, 2024 07:35 PM

கோல்கட்டா: நாளை(ஜீூன்-9) இரவு 7.15 மணிக்கு பிரதமர் பதவியேற்பு விழா ஜனாதிபதி மாளிகையில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் மோடி 3 வது முறையாக பிரதமர் பதவி ஏற்க உள்ளார். இந்த விழாவில் பங்கேற்க போவதில்லை என திரிணமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
கோல்கட்டாவில் வெற்றிபெற்ற திரிணமுல் காங். எம்.பி.க்கள் கூட்டத்தில் மம்தா பேசியதாவது:
மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெரிய வெற்றி பெற்று உள்ளது.மத்தியில் அமையும் பா.ஜ., கூட்டணியிலான ஆட்சிக்கு நான் வாழ்த்து கூற விரும்பவில்லை. மத்தியில் சட்டவிரோதமாகவும் ஜனநாயக விரோதமாகவும் ஆட்சி உருவாக்கப்பட்டு வருவதால், தனது கட்சி பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாது.
தற்போது இண்டியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்க உரிமை கோரவில்லை என்றாலும் வரும் நாட்களில் உரிமை கோரலாம். இவ்வாறு மம்தா பேசினார்.