Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ ஐஸ்வர்யம் அருளும் ஐஸ்வர்ய மஹா கணபதி

ஐஸ்வர்யம் அருளும் ஐஸ்வர்ய மஹா கணபதி

ஐஸ்வர்யம் அருளும் ஐஸ்வர்ய மஹா கணபதி

ஐஸ்வர்யம் அருளும் ஐஸ்வர்ய மஹா கணபதி

ADDED : ஜூலை 19, 2024 01:42 AM


Google News
Latest Tamil News
புதுடில்லியில் கேசவ்புரம் லாரன்ஸ் ரோடு பகுதியில் இந்த ஐஸ்வர்ய மகாகணபதி கோவில் உள்ளது. இந்த கோவில் இங்கு வசிக்கும் பக்தர்களால் துவங்கப்பட்டது. இந்தகோவிலில் ஐஸ்வர்ய விநாயகர் முக்கிய மூர்த்தியாகவும், உப சன்னதிகளில் ஆஞ்சநேயர், தட்சிணாகுருமூர்த்தி, துர்க்கா பரமேஸ்வரி, நவகிரகங்கள், குருவாயூரப்பன், தர்ம சாஸ்தா, சிவ பரிவாரங்களும் உள்ளன.

இந்த கோவிலில் தினமும் காலை 6:30க்கு கணபதி ேஹாமம் தொடர்ந்து நடைபெறுகிறது. 7:00 மணிக்கு அனைத்து சன்னதிகளிலும் அபிேஷகங்கள் நடைபெற்று, 8:00 மணிக்கு தீபாராதனை நடைபெறும்.

இந்த கோவில் ஞாயிறு முதல் வெள்ளி வரை காலை வேளையில் 6:00 முதல் 11:00 மணி வரை, மாலையில் 6:00 முதல் 8:30 வரையிலும், சனிக்கிழமை காலை 6:00 முதல் 12:00 வரையிலும், மாலை 5:30 முதல் 9:30 வரையிலும்சன்னதி திறந்திருக்கும்.

இந்தக்கோவிலில் முக்கியமாக நடக்கக்கூடிய விசேஷ நாட்கள்:

கார்த்திகை மாதம் - நவம்பர் 16 முதல் மண்டல பூஜை சாஸ்தாவிற்கு நடைபெறும். மாலையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். சனி, ஞாயிறுகளில் சாஸ்தாப்ரீத்தி நடைபெறுகிறது. மண்டல காலங்களில் பஜனை நடைபெறும்.

மாசி மாத சிவராத்திரியில் காலை ருத்ர ஏகாசசினி, வசோத்ரா ேஹாமம் நடைபெறும். மாலை வேளைகளில் நான்கு கால பூஜைகள் கலா நிகழ்ச்சிகளிலும் நடைபெறும்.

ஏப்ரலில் ராமர் சரித்திரம் நடைபெறும். இந்த மாதத்தில் விஷு கனி, பஞ்சாங்கம் படனம், படி பூஜை நடைபெறும்.

வைகாசியில் பாகவத சுப்தாகம் மூல பாராயணம் நடைபெறும்.

ஆனி மாதத்தில் புஷ்ய நட்சத்திரத்தில் வார்ச்சிக உற்சவம் நடைபெறும். முறையான வைதீக சம்பிரதாயத்துடன் நடைபெறும். புஷ்ய நட்சத்திர நாளில் அனைத்து சன்னதிகளிலும் 700 கிலோ முதல் 1,000 கிலோ வரையிலும் பலவிதமான புஷ்பங்களால் அர்ச்சனை நடைபெறும்.

ஆடி மாதத்தில் சப்தாகம்நடைபெறும். பாகவத சப்தாகம் நடைபெறும். சப்தாகம் கடைசி நாளன்று மிகவும் ஏழை குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

ஜென்மாஷ்டமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி, 10 நாட்களுக்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

லலிதா சஹஸ்ரநாமம், விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம், அகண்டம் (நட்சத்திர மாலா) 28 ஆவார்த்திகள் ஆடி மாதத்திலும், ஆனி மாதத்திலும் நடைபெற்று வருகின்றன.

நவராத்திரி ஒன்பது நாட்களிலும் கொலு வைத்து, தினமும் சண்டி பாராயணமும், நவா வர்ண பூஜையும், கடைசியில் சண்ட ேஹாமம் மற்றும் லலிதா ேஹாமம் நடைபெறும். மேலும் சங்கீத உற்சவமும் நடைபெறும். விஜயதசமி நாளன்று வித்யா ஆரம்பம் நடைபெறும்.

ஐப்பசி மாதம் கடைசி ஞாயிறன்று சாஸ்தா திருக்கல்யாணமும் நடைபெறும். கடந்த ஓராண்டு காலமாக மதிய வேளையில், அன்னதானமும் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 16 ஆண்டுகளாக பிசியோதெரபி குறைந்த செலவில் நடைபெற்று வருகிறது. மேலும் பரதநாட்டியம், சங்கீத வகுப்புகளும் நடைபெற்று வருகின்றன.

இந்த கோவில் சிவராம கிருஷ்ணன் ஆரம்பத்திலிருந்து தலைவராக இருந்து மிக சிரத்தையுடனும், சிறப்பாகவும் பணியாற்றி, கோவிலை இந்த அளவிற்குமுன்னுக்கு கொண்டு வந்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us