ADDED : ஜூலை 23, 2024 06:19 AM

உடுப்பி: தொடர் மழையால், ஆப்ரிக்க இன நத்தைகள் படையெடுப்பதால், மக்கள் அவதிப்படுகின்றனர்.
கர்நாடகாவில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், உடுப்பி மாவட்டம், பார்காலாவின் தேவி நகரில், ஆப்பிரிக்க இன நத்தைகள் அதிகளவில் தென்படுகின்றன. இவற்றில் இருந்து வீசும் துர்நாற்றம், அப்பகுதியினரை எரிச்சலடைய செய்துகின்றன.
இவை, வீடு முழுவதும் ஊர்ந்து செல்வதால், இவற்றை அழிக்க வேண்டும் என்றும் இப்பகுதி முழுதும் கிருமி நாசினி மருந்து தெளிக்க வேண்டும் என்றும் உடுப்பி நகராட்சியிடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.