250 அங்கன்வாடி மையங்களில் நர்சரி, எல்.கே.ஜி., - யு.கே.ஜி.,
250 அங்கன்வாடி மையங்களில் நர்சரி, எல்.கே.ஜி., - யு.கே.ஜி.,
250 அங்கன்வாடி மையங்களில் நர்சரி, எல்.கே.ஜி., - யு.கே.ஜி.,
ADDED : ஜூலை 23, 2024 06:20 AM

பெங்களூரு: ''அனைத்து வகுப்பு குழந்தைகளுக்கும் தரமான கல்வி, சத்தான உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக, நாட்டிலேயே முதன் முறையாக, அங்கன்வாடிகளில் நர்சரி, எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகள் துவக்கப்பட்டு உள்ளன,'' என, மாநில பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் தெரிவித்தார்.
பெங்களூரு கோவிந்தராஜ் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பட்டேகாரபாளையாவில், நர்சரி, எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளை நேற்று அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் துவக்கி வைத்தார். அவர் பேசியதாவது:
முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, மக்கள் நலன் சார்ந்த பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அங்கன்வாடி மையங்கள் மேம்படுத்துதல், கல்வி மற்றும் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்க அரசு முடிவு செய்தது.
அனைத்து வகுப்பு குழந்தைகளுக்கும் தரமான கல்வி, சத்தான உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக, நாட்டிலேயே முதன் முறையாக, மாநிலத்தில் 250 அங்கன்வாடிகளில், நர்சரி, எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகள் துவக்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.