திறப்பு விழாவுக்கு முன் இடிந்த ரூ.12 கோடி மதிப்பிலான பாலம்
திறப்பு விழாவுக்கு முன் இடிந்த ரூ.12 கோடி மதிப்பிலான பாலம்
திறப்பு விழாவுக்கு முன் இடிந்த ரூ.12 கோடி மதிப்பிலான பாலம்
ADDED : ஜூன் 19, 2024 01:20 AM

பாட்னா,பீஹாரில், முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, அராரியா மாவட்டத்தில் பக்ரா ஆற்றின் குறுக்கே குர்சா கண்டா மற்றும் சிக்தி நகரங்களை இணைக்கும் வகையில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக மாநில அரசு சார்பில், 12 கோடி ரூபாய் மதிப்பில் பாலம் கட்டப்பட்டது.
விரைவில் இந்த பாலம் திறக்கப்பட இருந்த நிலையில், அந்த பாலம் ஸ்திரத்தன்மை இழந்ததால், நேற்று திடீரென இடிந்து தரைமட்டமானது.
இது தொடர்பாக, அரசு சார்பில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுஉள்ளது.
இந்த விபத்தின் போது எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லை என, போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீஹார் அரசுப் பணிகளில் ஊழல் மலிந்துள்ளதற்கு சாட்சியாக இந்த விபத்து திகழ்கிறது என, எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.