எல்லை கிராமத்தை ஆக்கிரமித்த அகதிகள்
எல்லை கிராமத்தை ஆக்கிரமித்த அகதிகள்
எல்லை கிராமத்தை ஆக்கிரமித்த அகதிகள்
ADDED : ஜூன் 19, 2024 01:20 AM
புதுடில்லி,நம் அண்டை நாடான மியான்மருடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஊடுருவல்காரர்களால் தலைவலி ஏற்பட்டுஉள்ளது.
மியான்மரில் கலவரம் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, அங்குள்ள மக்கள் அகதிகளாக மணிப்பூரில் தஞ்சம் அடைகின்றனர்.
இது தவிர, மியான்மரை சேர்ந்த பலர், சட்டவிரோதமாக மணிப்பூருக்குள் ஊடுருவும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.
மணிப்பூரின் டெங்னோபால் மாவட்டத்தில் சட்டவிரோதமாக ஊடுருவிய மியான்மர் அகதிகள், அங்குள்ள எல்லைப் பகுதியில் வீடுகளை கட்டி குடியேறி உள்ளதை மாரிங் பழங்குடியினத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் உறுதி செய்துஉள்ளனர்.
மியான்மர் அகதிகளின் ஊடுருவல்களை கட்டுப்படுத்த முடியவில்லை என, கிராம தலைவர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.
இந்த ஊடுருவல்கள் தொடர்பாக, முதல்வர் பைரேன் சிங்குக்கு பா.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்கும் நாகா மக்கள் முன்னணி எம்.எல்.ஏ., ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளார்.