Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ ஒரு காரில் 50 பேர் பயணமா? ராஜஸ்தானில் குழப்பமோ குழப்பம்!

ஒரு காரில் 50 பேர் பயணமா? ராஜஸ்தானில் குழப்பமோ குழப்பம்!

ஒரு காரில் 50 பேர் பயணமா? ராஜஸ்தானில் குழப்பமோ குழப்பம்!

ஒரு காரில் 50 பேர் பயணமா? ராஜஸ்தானில் குழப்பமோ குழப்பம்!

ADDED : ஜூலை 28, 2024 11:33 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஜெய்ப்பூர்: ஒரு காரின் எடை, 3 கிலோ என்றால் நம்ப முடிகிறதா. அதுபோல, ஒரு காரில் 50 பேர் பயணிக்க முடியுமா. இதெல்லாம் ராஜஸ்தான் போக்குவரத்து துறையில் சாத்தியமாகியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில், 2016 ஏப்., முதல் 2021 மார்ச் வரையில், முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது, மாநில போக்குவரத்துத் துறையில் பதிவான வாகனங்கள் குறித்து, சி.ஏ.ஜி., எனப்படும் தலைமை கணக்கு தணிக்கையாளர் அலுவலகம் ஆய்வு செய்தது.

நாடு முழுதும், போக்குவரத்து அலுவலகங்களின் பணிகளை கணினிமயமாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வாகனங்கள் தொடர்பான தகவல்களை, 'வாஹன்' தளத்திலும், லைசென்ஸ் தொடர்பான தகவல்களை, 'சாரதி' தளத்திலும் பார்க்க முடியும்.

இதற்கான செயலிகளும் உள்ளன. இதன்படி, நாடு முழுதும், 18 கோடி வாகன பதிவுகள் மற்றும் எட்டு கோடி லைசென்ஸ் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

ராஜஸ்தானில் இதுபோன்ற வாகன பதிவு மற்றும் லைசென்ஸ் தொடர்பான தகவல்களை, சி.ஏ.ஜி., ஆய்வு செய்தது. அதிகாரிகளே மிரளும் வகையில், அதில் பெரும் குழப்பங்கள் உள்ளன. அதன் விபரம்:

இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களைத் தவிர மற்ற வாகனங்கள் தொடர்பான, 1--0.14 லட்சம் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், 15,570 வாகனங்கள், 0 - 3 கிலோ எடை உள்ளவை. வாங்கிய தேதிக்கு முன்பாகவே, 119 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவற்றில், 14 வாகனங்களின் எடை, தலா 1 லட்சம் கிலோவுக்கு மேல் உள்ளது. மேலும், 712 வாகனங்கள் போலியான இன்ஜின் நம்பர் மற்றும் சேசிஸ் நம்பர் கொடுத்து பதிவு செய்யப்பட்டுள்ளன. 18 வயதுக்கு கீழுள்ள, 166 பேருக்கு லைசென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

மொத்தம், 1,219 வாகனங்களின் இருக்கை அளவுகள் தவறாக காட்டப்பட்டுள்ளன. 120 சரக்கு வாகனங்கள், 10 - 100 பயணியர் இருக்கையுடன் காட்டப்பட்டுள்ளன.

ஏழு கார்கள், 10 - 50 பேர் பயணிக்கும் இருக்கை வசதி உள்ளதாகக் காட்டப்பட்டுள்ளன. மேலும், 1,018 பஸ் போன்ற பயணியர் வாகனங்களில், 2 அல்லது 3 இருக்கை வசதி உள்ளவையாகக் காட்டப்பட்டுள்ளன.

இது தொடர்பாக, சி.ஏ.ஜி.,யின் அறிக்கை, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு டிச.,ல் இந்த தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டன. ஆனால், அவை திருத்தப்படவில்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us