Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ மாதத்தில் 3வது சனிக்கிழமை 'புத்தக பை இல்லா தினம்'

மாதத்தில் 3வது சனிக்கிழமை 'புத்தக பை இல்லா தினம்'

மாதத்தில் 3வது சனிக்கிழமை 'புத்தக பை இல்லா தினம்'

மாதத்தில் 3வது சனிக்கிழமை 'புத்தக பை இல்லா தினம்'

ADDED : ஜூன் 20, 2024 05:41 AM


Google News
பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள பள்ளிகளில் இம்மாதத்தில் இருந்து மூன்றாவது சனிக்கிழமை தோறும் 'புத்தக பை இல்லா தினத்தை' நடைமுறைப்படுத்த, அனைத்து பள்ளிகளுக்கும், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி துறை உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகாவில் தினமும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் பைகளில் நிரம்பி வழியும் புத்தகங்களால், அவர்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். அத்துடன், அவர்களுக்கு பாடங்கள் தவிர, சமூக அக்கறை தொடர்பான நடவடிக்கைகள் குறித்தும் பாடம் எடுக்க அரசு தீர்மானித்தது.

இதற்காக முதலில் வாரத்தில் ஒரு நாள் சனிக்கிழமை தோறும் 'புத்தக பை இல்லா' தினமாக கொண்டு வர நினைத்தது. ஆனால், அதை மாதத்தில் ஒரு நாளாக மாற்ற முடிவு செய்யப்பட்டது.

இத்திட்டம், 2019ல் அமலானது. சில மாதங்கள் இத்திட்டம் செயலில் இருந்தது. ஆனால் கொரோனா துவங்கியதால், அடுத்தடுத்த ஆண்டுகள் இதை செயல்படுத்த முடியாமல் போனது.

இந்நிலையில், எஸ்.இ.ஆர்.டி., எனும் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி துறை தற்போது ஒரு சுற்றறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

மாணவர்களை பன்முக நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதால், அவர்களுக்கு சமூக உணர்வு அதிகரிக்கும். இதற்காக பல்வேறு கருப்பொருளகளின் அடிப்படையில், மாணவர் களுக்கான 10 சுய விளக்க பாடங்கள், ஆசிரியர்களுக்கான வழிகாட்டு கையேடு ஆகியவை எஸ்.இ.ஆர்.டி.டி., இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன.

இந்த பாடங்கள் விழிப்புணர்வு, அனுபவம், கவனிப்பு என்ற மூன்று நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

உருது பள்ளிகளில் ஒவ்வொரு மாதம் மூன்றாவது வெள்ளிக் கிழமைகளிலும்; மற்ற பள்ளிகளில் மூன்றாவது சனிக் கிழமைகளிலும் 'புத்தக பை இல்லா' தினம் கொண்டாட வேண்டும். இத்தகவலை, அனைத்து துவக்க, உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட, பிளாக் கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் கூட்டம் நடத்தி, தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் புத்தக பை இல்லா தினத்தில், பள்ளிகளுக்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும். இத்திட்டத்தை வெற்றி பெற வைப்பது அதிகாரிகளின் பொறுப்பு.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us