பெங்களூரில் மூடப்பட்ட 3,225 சாலை பள்ளங்கள்
பெங்களூரில் மூடப்பட்ட 3,225 சாலை பள்ளங்கள்
பெங்களூரில் மூடப்பட்ட 3,225 சாலை பள்ளங்கள்
ADDED : ஜூன் 02, 2024 09:29 PM

பெங்களூரு: ''பெங்களூரில் 5,000 சாலை பள்ளங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில் 3,225 பள்ளங்கள் மூடப்பட்டுள்ளன,'' என பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் தெரிவித்தார்.
இது தொடர்பாக நேற்று அவர் கூறியதாவது:
பெங்களூரில் உள்ள சாலை பள்ளங்கள் குறித்து, சர்வே செய்யப்பட்டது. நகரில் 5,000 பள்ளங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில் 3,225 பள்ளங்கள் மூடப்பட்டன. மே 31 வரை காலக்கெடு விதிக்கப்பட்டிருந்த பகுதிகளில், பள்ளங்கள் மூடப்பட்டன.
ஆர்.ஆர்.நகர், தாசரஹள்ளி மண்டலங்களில் பள்ளங்களை மூட, ஜூன் 4 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மண்டலங்களிலும், 2,480 பள்ளங்கள், புதிதாக 1,500 பள்ளங்கள் உள்ளன. இவற்றை மூடும் பணி மும்முரமக நடக்கிறது.
மழைக் காலத்துக்கு முன்பே, சாலைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது. எங்கெங்கு பள்ளங்கள் தென்படுகிறதோ, அவை உடனடியாக மூடப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.