Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ அமர்நாத் கோவிலுக்கு நந்தி சிலை சிற்பி அருண் யோகிராஜ் பெருமிதம்

அமர்நாத் கோவிலுக்கு நந்தி சிலை சிற்பி அருண் யோகிராஜ் பெருமிதம்

அமர்நாத் கோவிலுக்கு நந்தி சிலை சிற்பி அருண் யோகிராஜ் பெருமிதம்

அமர்நாத் கோவிலுக்கு நந்தி சிலை சிற்பி அருண் யோகிராஜ் பெருமிதம்

ADDED : ஜூன் 02, 2024 09:28 PM


Google News
Latest Tamil News
மைசூரு: பிரபல சிற்பக் கலைஞர் அருண் யோகிராஜ், காஷ்மீரின் அமர்நாத் கோவிலில் பிரதிஷ்டை செய்ய, நந்தி சிலை செதுக்கி கொடுத்துள்ளார்.

மைசூரின் பிரசித்தி பெற்ற சிற்பக்கலைஞர் அருண் யோகிராஜ். இவர் அயோத்தி ராமர் கோவிலுக்கு பால ராமர் சிலையை செதுக்கி கொடுத்தார். சிலை மிகவும் அற்புதமாக அமைந்துள்ளது. தற்போது பக்தர்கள் பக்தியுடன் வணங்குகின்றனர்.

இப்போது மற்றொரு பெருமை, இவருக்கு கிடைத்துள்ளது. காஷ்மீரின் வரலாற்று பிரசித்தி பெற்ற, ஹிந்துக்களின் புண்ணிய தலமான அமர்நாத் கோவிலின், பனி லிங்கம் முன்பாக பிரதிஷ்டை செய்ய, அழகான நந்தி சிலை செதுக்கி கொடுத்துள்ளார். இந்த மாதம் சிவலிங்கத்தின் முன், நந்தி சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

சிற்பி அருண் யோகிராஜ் கூறியதாவது:

அமர்நாத் யாத்திரை செல்ல, பலரும் விரும்புவர். நமது ஹிந்துக்களின் புண்ணிய தலமாகும். இத்தகைய பவித்ரமான இடத்தில், நான் செதுக்கிய நந்தி விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்படுவது, மகிழ்ச்சியான விஷயமாகும். இரண்டரை மாத உழைப்பின் பலனாக, அற்புதமான நந்தி சிலை உருவானது.

நந்திசிலை 3 அடி உயரம், 4 அடி நீளம் கொண்டது. மைசூரின், ஹெச்.டி.கோட்டேவில் உள்ள கல் பயன்படுத்தப்பட்டது. 5 டன்னாக இருந்த கல், சிலை செதுக்கிய பின் 1.5 டன்னாக குறைந்துள்ளது. நந்தி விக்ரகம் காஷ்மீருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us