பி.எம்.டி.சி., பஸ்சில் தீ 30 பயணியர் தப்பினர்
பி.எம்.டி.சி., பஸ்சில் தீ 30 பயணியர் தப்பினர்
பி.எம்.டி.சி., பஸ்சில் தீ 30 பயணியர் தப்பினர்
ADDED : ஜூலை 10, 2024 04:18 AM

எம்.ஜி.,ரோடு, : பி.எம்.டி.சி., பஸ்சில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 30 பயணியர் உயிர் தப்பினர்.
பெங்களூரு, ரோஸ் கார்டனில் இருந்து சிவாஜி நகருக்கு நேற்று காலை 8:00 மணிக்கு பி.எம்.டி.சி., பஸ் சென்றது. அந்த பஸ்சில் 30 பயணியர் இருந்தனர். எம்.ஜி., ரோடு அனில் கும்ப்ளே சதுக்கம் அருகே பஸ் வந்தது.
போக்குவரத்து சிக்னலில் சிவப்பு லைட் எரிந்ததால், டிரைவர் உமேஷ் பஸ்ஸை நிறுத்தி, இன்ஜினை 'ஆப்' செய்தார்.
பச்சை லைட் வந்ததால் இன்ஜினை ஆன் செய்து பஸ்சை டிரைவர் இயக்க முயன்றார். ஆனால் பஸ் ஸ்டார்ட் ஆகவில்லை.
திடீரென இன்ஜினில் தீப்பிடித்தது. தண்ணீரை ஊற்றி, தீயை அணைக்க டிரைவர் முயன்றார். ஆனால் தீ வேகமாக பரவியது.
சுதாரித்துக் கொண்ட டிரைவர், கண்டக்டர் பஸ்சில் இருந்த 30 பயணியரையும் கீழே இறக்கினர்.
சிறிது நேரத்தில் பஸ்சின் வெளிப் பக்கத்திலும் தீப்பரவியது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் அங்கு வந்து, பஸ்சில் பிடித்த தீயை, தண்ணீரை அடித்து அணைத்தனர். ஆனாலும் பஸ்சின் வெளிப் பக்கம் தீயில் எரிந்து சேதமடைந்தது.
மீட்பு வாகனம் கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து பஸ் இழுத்துச் செல்லப்பட்டது.
தீப்பிடித்து எரிந்த பி.எம்.டி.சி., பஸ். இடம்: அனில் கும்ப்ளே சதுக்கம், எம்.ஜி., ரோடு, பெங்களூரு.