மியான்மரில் சைபர் அடிமைகளாக இருந்த 283 பேர் நாடு திரும்பினர்
மியான்மரில் சைபர் அடிமைகளாக இருந்த 283 பேர் நாடு திரும்பினர்
மியான்மரில் சைபர் அடிமைகளாக இருந்த 283 பேர் நாடு திரும்பினர்
ADDED : மார் 12, 2025 01:52 AM
புதுடில்லி: மியான்மரில், சட்டவிரோத வேலைகளில் பணி அமர்த்தப்பட்ட, 283 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு தாயகம் திரும்பினர்.
மியான்மர் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, இந்தியர்களை போலி முகவர்கள் அழைத்துச் செல்கின்றனர். ஆனால் உறுதியளித்தபடி வேலை வாங்கித் தராமல், 'சைபர்' குற்றங்கள், ஆன்லைன் மோசடி போன்ற சட்ட விரோத செயல்களில் இந்தியர்களைஈடுபடுத்துகின்றனர்.
இந்நிலையில், மியான்மரில் சட்டவிரோத வேலைகளில் பணியமர்த்தப்பட்ட, 283 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, நம் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். தாய்லாந்தின் மே சோட்டில் இருந்து இந்திய விமானப்படை விமானம் வாயிலாக, அவர்கள் நாடு திரும்பினர். இந்த தகவலை நம் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
வேலை தருவதாக விளம்பரம் செய்து, அதை நம்பி வருவோரை, தங்களின் இடத்திற்கு வரவழைத்து, 'சைபர் கிரைம்' குற்றச்செயல்களில் ஈடுபடுத்துகின்றனர். இதில் பாதிக்கப்பட்டோரை, 'சைபர் அடிமைகள்' என, வகைப்படுத்தப்படுகின்றனர்.