-ரூ.35,000 கோடியில் சாலைகள் முதல்வர் ரேகா குப்தா தகவல்
-ரூ.35,000 கோடியில் சாலைகள் முதல்வர் ரேகா குப்தா தகவல்
-ரூ.35,000 கோடியில் சாலைகள் முதல்வர் ரேகா குப்தா தகவல்
ADDED : ஜூன் 04, 2025 08:41 PM
புதுடில்லி:தலைநகர் டில்லியில் நடக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்டப் பணிகள் குறித்து, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில், டில்லியில் நேற்று நடந்த கூட்டத்தில், துணைநிலை கவர்னர் சக்சேனா, முதல்வர் ரேகா குப்தா மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்டத்தில் டில்லியில் நடக்கும் சாலைப் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. மேலும், செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்திற்குப் பின், நிருபர்களிடம் முதல்வர் ரேகா குப்தா கூறியதாவது:
இரட்டை இயந்திர அரசால் டில்லியில் மேம்பாட்டுப் பணிகள் மும்முரமாக நடக்கிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் டில்லியில், 35,000 கோடி ரூபாய் செலவில் சாலைப் பணிகள் நடக்கின்றன.
ஷிவ் மூர்த்தி முதல் நெல்சன் மண்டேலா சாலை வரை 7 கி.மீ., தூரத்துக்கு சுரங்கப் பாதை அமைக்கப்படுகிறது. அதேபோல, ஐ.என்.ஏ.,வில் இருந்து இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வரை உயர்நிலை சாலை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடக்கிறது.
சாலை ஓரத்தில் வடிகால் அமைக்கும் பணியையும் தேசிய நெடுஞ்சாலை ஆணையமே செய்து தருகிறது. இது, டில்லி அரசுக்கு மிகப்பெரிய உதவியாக அமைந்துள்ளது.
டில்லியில் 150 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் மற்றும் சாலையின் கீழ் பாலம் கட்டும் திட்டங்களுக்கும் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஆணையத்தின் சார்பில், டில்லியில் 1.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.