பொதுவெளியில் ஆடு வெட்டக்கூடாது ஜூம்மா மசூதி இமாம் அறிக்கை
பொதுவெளியில் ஆடு வெட்டக்கூடாது ஜூம்மா மசூதி இமாம் அறிக்கை
பொதுவெளியில் ஆடு வெட்டக்கூடாது ஜூம்மா மசூதி இமாம் அறிக்கை
ADDED : ஜூன் 04, 2025 08:40 PM
புதுடில்லி:“பக்ரீத் நாளில், திறந்த வெளி மற்றும் தெருக்களில் ஆடு வெட்டுவதை தவிர்க்க வேண்டும்,”என, ஜூம்மா மசூதி ஷாஹி இமாம் சையத் ஷாபான் கூறியுள்ளார்.
இதுகுறித்து, இமாம் வெளியிட்டுள்ள அறிக்கை:
பக்ரீத் பண்டிகை நாளில், முஸ்லிம்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
ஹோலி மற்றும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் நாடு முழுதும் கண்ணியத்துடன் கொண்டாடப்படுகின்றன. அதேபோல, பக்ரீத் பண்டிகையையும் முஸ்லிம்கள் பயபக்தியுடன் கொண்டாட வேண்டும்.
இந்த ஆண்டு பக்ரீத் வரும், 6- அல்லது 7ம் தேதி கொண்டாட வாய்ப்புள்ளது.
பக்ரீத் நாளில், முஸ்லிம்கள் தங்களூடைய எந்தச் செயலும் சக மக்களின் உணர்வுகள் அல்லது நம்பிக்கைகளைப் புண்படுத்தும்படி நடந்து கொள்ளக் கூடாது.
வீடு மற்றும் வளாகத்துக்குள் மட்டுமே ஆடு பலியிட வேண்டும். சாலை ஓரத்திலோ, தெருவிலோ அல்லது திறந்தவெளியிலோ ஆடு வெட்டக் கூடாது.
மேலும், பலியிடுவதை போட்டோ மற்றும் வீடியோ எடுக்கக் கூடாது. அதை சமூக ஊடகங்களில் வெளியிடுவதும் தவறு.
இஸ்லாம் அமைதியின் மதம். யாருடைய உணர்வும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் நம் நடத்தை மூலம் இதை நிரூபிக்க வேண்டியதும் முஸ்லிம்களின் கடமை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.