எய்ம்ஸ்சிலிருந்து ராஜ்நாத் சிங் டிஸ்சார்ஜ்
எய்ம்ஸ்சிலிருந்து ராஜ்நாத் சிங் டிஸ்சார்ஜ்
எய்ம்ஸ்சிலிருந்து ராஜ்நாத் சிங் டிஸ்சார்ஜ்
ADDED : ஜூலை 13, 2024 06:48 PM

புதுடில்லி: கடும் முதுகுவலி காரணமாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்,73, இன்று(13.07.2024) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு, கடும் முதுகுவலி ஏற்பட்டதால் கடந்த சில நாட்களுக்கு முன் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனி வார்டுக்கு மாற்றப்பட்ட அவருக்கு, எம்.ஆர்.ஐ., ஸ்கேன் செய்யப்பட்டது, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். தற்போது உடல்நிலை சீராக இருப்பதாகவும், சிகிச்சைக்குபின் இன்று (13.07.2024) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.