‛ இண்டியா' கூட்டணி பக்கம் மக்கள்: ராகுல் மகிழ்ச்சி
‛ இண்டியா' கூட்டணி பக்கம் மக்கள்: ராகுல் மகிழ்ச்சி
‛ இண்டியா' கூட்டணி பக்கம் மக்கள்: ராகுல் மகிழ்ச்சி
ADDED : ஜூலை 13, 2024 06:10 PM

புதுடில்லி: விவசாயிகள், இளைஞர்கள், தொழிலாளர்கள் என அனைவரும் ‛ இண்டியா ' பக்கம் நிற்கின்றனர் என லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
7 மாநிலங்களில் 13 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் ‛ இண்டியா ' கூட்டணி 10 இடங்களில் வெற்றி பெற்றது.
இது தொடர்பாக ராகுல், எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: பா.ஜ.,வினர் ஏற்படுத்திய 'பயம், குழப்பம்' என்ற வலை உடைந்துவிட்டது என்பதை 7 மாநிலங்களில் நடந்து முடிந்த இடைத்தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளன. விவசாயிகள், இளைஞர்கள், தொழிலாளர்கள், தொழிலதிபர்கள், ஊழியர்கள் என ஒவ்வொரு வர்க்கமும் சர்வாதிகாரத்தை முற்றிலுமாக அழித்து நீதியின் ஆட்சியை நிலைநாட்ட விரும்புகிறது.
பொதுமக்கள் தங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்காகவும், அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்காகவும் ‛ இண்டியா ' கூட்டணியுடன் முழுமையாக நிற்கின்றனர். இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.