மதுவிலக்கு திருத்த மசோதா அமல்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
மதுவிலக்கு திருத்த மசோதா அமல்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
மதுவிலக்கு திருத்த மசோதா அமல்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ADDED : ஜூலை 13, 2024 06:39 PM

சென்னை: கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் வகையில் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட புதிய மதுவிலக்கு திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக இன்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது பூதாகரமான பிரச்னையாக மாறிய நிலையில், மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவை தமிழக அரசு சட்டசபையில் கொண்டுவந்து நிறைவேற்றியது.
கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் புதிய மதுவிலக்கு திருத்தத்திற்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்தார்.
இதையடுத்து இன்று முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பு,
மதுவிலக்கு திருத்த மசோதா -2024 சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஒப்புதலுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது.
கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், விற்பனை செய்வோர் மீது ஆயுள் தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். கள்ளச்சாராயம் விற்பதற்கு பயன்படுத்தப்படும் அசையும் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்.மேலும் பிணையில் (ஜாமினில் ) வெளியே வர முடியாதபடி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ஸ்டாலின் அறிவித்தார்.