மத்திய நேரடி வரி வசூல் ரூ.5.74 லட்சம் கோடி
மத்திய நேரடி வரி வசூல் ரூ.5.74 லட்சம் கோடி
மத்திய நேரடி வரி வசூல் ரூ.5.74 லட்சம் கோடி
ADDED : ஜூலை 13, 2024 07:16 PM

புதுடில்லி: நடப்பு நிதியாண்டில் மத்திய நிகர நேரடி வரி வசூல் ரூ.5.74 லட்சம் கோடி உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து சி.பி.டிடி எனப்படும் மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், நடப்பு நிதியாண்டான 2024-25 ம் ஆண்டில் ஏப்.01-ம் தேதி முதல் ஜூலை 11-ம் தேதி வரையிலான ஆண்டில் மத்திய நிகர நேரடி வரியாக ரூ.5 லட்சத்து 74 ஆயிரத்து 357 கோடி வசூலாகியுள்ளது. இது 20 சதவீத வளர்ச்சி ஆகும்.
அதே நேரம் கார்ப்பரேட் வரியாக ரூ. 2 லட்சத்து 10 ஆயிரத்து 274 கோடி வசூலாகியுள்ளது. இது 12.5 சதவீத வளர்ச்சி ஆகும். தனிநபர் வருமானம் மற்றும் செக்யூரிட்டி பரிவர்த்தனை வாயிலாக ரூ.3 லட்சத்து 46 ஆயிரத்து 36 கோடி வசூலாகியுள்ளது. இது 24 சதவீதம் ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.