ADDED : ஜூலை 10, 2024 02:07 AM
இரு தரப்பு பேச்சின்போது, புடின் பேசியதாக, அந்த நாட்டின் அரசு செய்தி நிறுவனமான, 'டாஸ்' கூறியுள்ளதாவது:
தற்போதுள்ள மிக முக்கியமான பிரச்னையான உக்ரைன் விவகாரத்தில் தீர்வு காண்பதற்கு பிரதமர் மோடி காட்டும் அக்கறைக்கு நன்றி. குறிப்பாக அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும் என்று அவர் கூறியுள்ளதை வரவேற்கிறேன்.
இந்தியாவுடன் பல்வேறு சர்வதேச அமைப்புகளில் இணைந்து செயல்பட்டு வருகிறோம். பிரதமர் மோடியுடன் தனிப்பட்ட முறையில் பல உலகளாவிய விவகாரங்கள் தொடர்பாக பேசும் வாய்ப்பு கிடைத்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் கூறியுள்ளதாவது:
பிரதமர் மோடியின் முயற்சியை, 'நேட்டோ' நாடுகள் ஏற்குமா என்பது தெரியவில்லை. அவர்கள் அடிக்கடி சந்தித்து பேசுகின்றனர். இந்த விஷயத்தில் அவர்கள் என்ன முடிவு எடுக்கின்றனர் என்பதை கவனித்து வருகிறோம்.
பல நாட்டுத் தலைவர்கள் அமைதி வழியில் தீர்வு காணும்படி தொடர்ந்து கூறி வருகின்றனர். ஒரு சில விஷயங்களை சிலர் ஏற்காமல் இருக்கலாம். சில நேரங்களில் பல விஷயங்களை சிலர் ஏற்காமல் இருக்கலாம். ஆனால் பேச்சு நடத்தினால், அதனால் நல்ல தீர்வு காண முடியும் என்பதை நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.