ஒடிசா பி.ஜே.டி. ராஜ்யசபா எம்.பி. திடீர் ராஜினாமா: நவீன் பட்நாயக் அதிர்ச்சி
ஒடிசா பி.ஜே.டி. ராஜ்யசபா எம்.பி. திடீர் ராஜினாமா: நவீன் பட்நாயக் அதிர்ச்சி
ஒடிசா பி.ஜே.டி. ராஜ்யசபா எம்.பி. திடீர் ராஜினாமா: நவீன் பட்நாயக் அதிர்ச்சி
ADDED : ஜூலை 31, 2024 09:05 PM

புவனேஸ்வரம்: ஒடிசாவின் பிரதான எதிர்க்கட்சியான பிஜூ ஜனதா தள கட்சி ராஜ்யசபா பெண் எம்.பி. மம்தா மொகந்த் இன்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இம்மாநிலத்திற்கு சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பிஜூ ஜனதா தளம் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து கட்சியின் முக்கிய தலைவர்கள் நவீன்பட்நாயக் மீது அதிருப்தியில் இருந்தனர்.
இந்நிலையில் இக்கட்சியின் ராஜ்யசபா பெண் எம்.பி., மம்தா மொகந்த் இன்று(31.07.2024) திடீரென எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இவர் பிஜூ ஜனதா தளத்தின் செல்வாக்கு மிக்க குடுமி பழங்குடியினத்தை சேர்ந்தவர் ஆவார். தனது ராஜினாமா கடிதத்தை துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கரிடம் அளித்துவிட்டதாக தெரிவித்தார்.
தற்போது ராஜ்யசபாவில் பிஜூ ஜனதா தளத்திற்கு 9 எம்.பி.க்கள் இருந்தனர். அது 8 ஆக குறைந்ததால் நவீன் பட்நாயக்கிற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.