டில்லியில் கனமழை: விமான சேவை பாதிப்பு
டில்லியில் கனமழை: விமான சேவை பாதிப்பு
டில்லியில் கனமழை: விமான சேவை பாதிப்பு
ADDED : ஜூலை 31, 2024 08:49 PM

புதுடில்லி: தலைநகர் டில்லி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்குகிறது.
பருவமழை தீவிரமடைந்து வருவதையடுத்து டில்லி, உத்திரபிரதேசம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மேகமூட்டத்துடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதையடுத்து தலைநகர் டில்லி , என்.சி.ஆர். எனப்படும் தேசிய தலைநகர் மண்டம் ஆகிய பகுதிகளில் இன்று (31.07.2024) மாலை முதல் கனமழை பெய்ய துவங்கி 2 மணி நேரம் பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது. பல பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
டில்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் வந்திறங்க வேண்டிய 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் வேறு நகருக்கு திருப்பி விடப்பட்டது.