/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள்

14.58 லட்சம் பி.எப்., கணக்குகள்
பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையமான இ.பி.எப்.ஓ.,வில் கடந்த மார்ச் மாதத்தில் 14.58 லட்சம் உறுப்பினர்கள் இணைந்துள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது. புதிதாக 7.54 லட்சம் உறுப்பினர்கள் இணைந்துள்ளதாகவும்; இது முந்தைய பிப்ரவரி மாதத்தை விட 2.03 சதவீதம் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய உறுப்பினர்களில் 4.45 லட்சம் பேர் 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'பெல்ரைஸ்' ஐ.பி.ஓ., வெளியீடு
வாகன உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் 'பெல்ரைஸ் இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டுக்கான விண்ணப்பம் நேற்று துவங்கியது. சில்லரை முதலீட்டாளர்கள் நாளை வரை விண்ணப்பிக்கலாம். ஒரு பங்கின் விலை, 85 - 90 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம், 166 பங்குகளை பெற விண்ணப்பிக்கலாம். இந்நிறுவனத்தின் 2,150 கோடி ரூபாய் மதிப்பிலான 23.89 கோடி பங்குகள் சந்தையில் பட்டியலிடப்பட உள்ளன.
உள்நாட்டில் பறந்தவர்கள் அதிகம்
உள்நாட்டு விமான பயணியர் எண்ணிக்கை, கடந்த மாதம் 8.45 சதவீதம் அதிகரித்து 1.43 கோடியாக இருந்தது என, மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது. உள்நாட்டு பயணங்களில், விமான நிறுவனங்களின் பங்களிப்பை பொறுத்தவரை 64.10 சதவீதத்துடன் இண்டிகோ முதல் இடத்திலும், 27.20 சதவீதத்துடன் ஏர் இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன. ஆகாசா ஏர், ஸ்பைஸ்ஜெட் 3, 4வது இடங்களில் உள்ளன.
'ஊபர்'க்கு நோட்டீஸ்
புக் செய்தவுடன் வேகமாக பயண சேவை கிடைக்க, 'அட்வான்ஸ் டிப்ஸ்' என்ற வாய்ப்பை ஊபர் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது கவலை அளிப்பதாகவும், பயனர்களை அட்வான்ஸ் டிப்ஸ் வழங்கும் கட்டாயத்துக்கு தள்ளுவது தவறானது என்றும் மத்திய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்திருந்தார். இதைத்
லீலா பேலஸ் ஐ.பி.ஓ.,
சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலின் தாய் நிறுவனமான 'ஸ்க்லோஸ் பெங்களூர்', புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 3,500 கோடி ரூபாய் திரட்டவுள்ளது. முதலீட்டாளர்கள் வரும் 26ம் தேதி துவங்கி, 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பங்கு ஒன்றின் விலை 413 - 435 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
என்.டி.பி.சி.,க்கு தலைவர் கிடைக்கல
நாட்டின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிறுவனமான என்.டி.பி.சி.,யின் தலைவர் பதவிக்கான தேடுதல் வேட்டை தொடர்கிறது. தற்போதைய தலைவரான குர்தீப் சிங்கின் பதவிக்காலம் வரும் ஜூலை 31ல் முடிவடைய உள்ளது. இதனையடுத்து, புதிய தலைவரை தேர்வு செய்ய என்.டி.பி.சி., இயக்குநர்கள், பிற பொதுத்துறை நிறுவன பணியாளர்கள் உட்பட 12 பேரிடம் பொதுத் துறை நிறுவனங்களின் தேர்வுக் குழு நேர்காணல் நடத்தியது. இதில், தகுதியான நபராக ஒருவரை கூட பரிந்துரைக்கவில்லை.