ADDED : மே 22, 2025 12:12 AM

19,000
டாடா சன்ஸ், இணைய சேவை வழங்கும் தன் துணை நிறுவனமான டாடா டெலி சர்வீசசுக்கு 19,000 கோடி ரூபாயை மூலதனமாக அளிக்க முன்வந்துள்ளது. இந்நிறுவனத்தின்
ஏ.ஜி.ஆர்., மற்றும் பிற கடன்கள் 19,256 கோடி ரூபாயை கடந்துள்ள நிலையில்,
டாடா சன்ஸ் கைகொடுத்துள்ளது.
18,00,000
நாட்டின் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி, கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு, மே மாதத்தில், நாளொன்றுக்கு 18 லட்சம் பேரல்களாக அதிகரித்துள்ளது. இ.எஸ்.ஓ.பி., எனப்படும் கிழக்கு சைபீரியா - பசிபிக் பெருங்கடல் வாயிலாக இந்தியாவுக்கு இறக்குமதியாகும் கச்சா எண்ணெய் தேவை, வரும் ஜூலை வரை நீடிக்கும் என கூறப்படுகிறது.