/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ கருடா ஏரோஸ்பேஸ் ரூ.8.56 கோடி நிதி திரட்டியது கருடா ஏரோஸ்பேஸ் ரூ.8.56 கோடி நிதி திரட்டியது
கருடா ஏரோஸ்பேஸ் ரூ.8.56 கோடி நிதி திரட்டியது
கருடா ஏரோஸ்பேஸ் ரூ.8.56 கோடி நிதி திரட்டியது
கருடா ஏரோஸ்பேஸ் ரூ.8.56 கோடி நிதி திரட்டியது
ADDED : ஜூன் 13, 2025 10:31 PM

சென்னை:சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், ட்ரோன் உற்பத்தி செய்யும் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம், 8.56 கோடி ரூபாய் முதலீடு பெற்றுள்ளது. நிதி திரட்டல் இரண்டாம் சுற்றில், 100 கோடி ரூபாய் திரட்டியதைத் தொடர்ந்து, இந்த முதலீடு பெறப்பட்டு உள்ளது.
ஆண்டு ட்ரோன் உற்பத்தி திறனை, 8,000த்தில் இருந்து 12,000 முதல் 15,000 ஆக அதிகரிக்க இந்த முதலீடு பயன்படுத்தப்பட உள்ளது. அத்துடன் நீண்ட கால இலக்காக, ஆண்டுக்கு 50,000 ட்ரோன்களை உற்பத்தி செய்ய இந்நிறுவனம் இலக்கு வைத்துள்ளது.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை வேகப்படுத்தி, அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில், ட்ரோன் மற்றும் ட்ரோன் எதிர்ப்பு சாதனங்கள் உற்பத்தியை முழுமையாக உள்நாட்டு மயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.