
போர் பதற்றத்தால் சரிவு
இந்திய பங்குச் சந்தைகள், வாரத்தை சரிவுடன் நிறைவு செய்தன. ஈரானின் அணு ஆயுத வசதிகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் போர் பதற்றம் மேலும் அதிகரித்தது. இது முதலீட்டாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. நேற்றைய வர்த்தக நேரத்தின் இடையே சென்செக்ஸ் 1,330 புள்ளிகளும்; நிப்டி 410 புள்ளிகளும் சரிவு கண்டன.
உலக சந்தைகள்
வியாழனன்று, அமெரிக்க சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. ஆசிய சந்தைகளை பொறுத்தவரை, ஜப்பானின் நிக்கி, ஹாங்காங்கின் ஹாங்சேங், தென்கொரியாவின் கோஸ்பி, சீனாவின் ஷாங்காய் எஸ்.எஸ்.இ., என அனைத்தும் நேற்று சரிவுடன் முடிவடைந்தன. ஐரோப்பிய சந்தைகள் சரிவுடன் வர்த்தகமாகின.
சரிவு கண்ட பங்குகள் - நிப்டி (%)
அதானி போர்ட்ஸ் 2.27
சரிவுக்கு காரணங்கள்
இஸ்ரேல் - ஈரான் இடையே போர் பதற்றம்
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் 1,264 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று விற்று இருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை, நேற்று 1 பேரலுக்கு 7.44 சதவீதம் அதிகரித்து, 74.52 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 59 பைசா சரிந்து, 86.11 ரூபாயாக இருந்தது.