/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ அடிப்படை சேவை 'டிமேட்' கணக்கு உச்சவரம்பு ரூ.10 லட்சமானது அடிப்படை சேவை 'டிமேட்' கணக்கு உச்சவரம்பு ரூ.10 லட்சமானது
அடிப்படை சேவை 'டிமேட்' கணக்கு உச்சவரம்பு ரூ.10 லட்சமானது
அடிப்படை சேவை 'டிமேட்' கணக்கு உச்சவரம்பு ரூ.10 லட்சமானது
அடிப்படை சேவை 'டிமேட்' கணக்கு உச்சவரம்பு ரூ.10 லட்சமானது
ADDED : ஜூன் 29, 2024 12:53 AM

புதுடில்லி:பி.எஸ்.டி.ஏ., எனும், 'அடிப்படை சேவை டிமேட் கணக்கு'களில் ஒருவர் வைத்திருக்கக் கூடிய கடன் மற்றும் கடன் அல்லாத பத்திரங்களின் உச்சவரம்பை, 10 லட்சம் ரூபாயாக 'செபி' உயர்த்தி உள்ளது.
இந்த மாற்றங்கள், வரும் செப்டம்பர் முதல் நடைமுறைக்கு வர உள்ளது.
சிறிய முதலீட்டாளர்களின் நலன் கருதி, கடந்த 2012ம் ஆண்டு பி.எஸ்.டி.ஏ., வசதியை செபி அறிமுகப்படுத்தியது.
இந்த கணக்கில், ஒருவர் 2 லட்சம் ரூபாய் வரையிலான கடன் பத்திரங்களையும், 2 லட்சம் ரூபாய் வரையிலான கடன் அல்லாத பத்திரங்களையும் வைத்திருக்கலாம். அதாவது, ஒட்டுமொத்தமாக 4 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் வைத்திருக்கலாம்.
இந்நிலையில், தற்போது இந்த வரம்பை, 10 லட்சம் ரூபாயாக செபி உயர்த்தியுள்ளது.
இந்த கணக்குக்கான ஆண்டு பராமரிப்பு கட்டணத்தையும், செபி மாற்றி அமைத்துள்ளது.
அதன்படி, நான்கு லட்சம் ரூபாய் வரையிலான கணக்குகளுக்கு, ஆண்டு கட்டணம் இல்லை. 4 முதல் 10 லட்சம் ரூபாய் வரையிலான கணக்குகளுக்கு, கட்டணமாக 100 ரூபாய் வசூலிக்கப்படும். 10 லட்சம் ரூபாய்க்கு கூடுதலான பத்திரங்களை வைத்திருக்கும் பட்சத்தில், அது அடிப்படை கணக்காக கருதப்படாது என்பதால், வழக்கமான கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்த முடிவின் கீழ் பயன்பெற விரும்புவோருக்கு, ஒரு டிமேட் கணக்கு மட்டுமே இருக்க வேண்டும்.