/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ நிகழ்வு, செய்தி, தரவு ஆகியவற்றில் கவனம் வைக்கவும் நிகழ்வு, செய்தி, தரவு ஆகியவற்றில் கவனம் வைக்கவும்
நிகழ்வு, செய்தி, தரவு ஆகியவற்றில் கவனம் வைக்கவும்
நிகழ்வு, செய்தி, தரவு ஆகியவற்றில் கவனம் வைக்கவும்
நிகழ்வு, செய்தி, தரவு ஆகியவற்றில் கவனம் வைக்கவும்
ADDED : ஜூன் 30, 2024 01:27 AM

கடந்த வாரம் சென்செக்ஸ் 79,000 புள்ளி களையும்; நிப்டி 24,000 புள்ளிகளையும் கடந்து, புதிய உச்சம் தொட்டன. கடந்த 2021ம் ஆண்டுக்கு பின், மிக வேகமாக 1,000 புள்ளிகள் ஏற்றத்தை நிப்டி கண்டது
நாட்டின் முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி, கடந்த மே மாதத்தில் 6.30 சதவீதமாக சற்றே குறைந்துள்ளது. இந்த எட்டு துறைகளின் வளர்ச்சி, கடந்த ஏப்ரல் மாதத்தில் 6.70 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது
நிதி பற்றாக்குறை, கடந்த மே மாத நிலவரப்படி, நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் இலக்கில் 3 சதவீதத்தை எட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 11.80 சதவீதமாக இருந்தது. தேர்தல் நடவடிக்கைகள் காரணமாக நிதிப் பற்றாக்குறை இலக்கை அடைவதில் மந்தநிலை ஏற்பட்டது
பி.எஸ்.டி.ஏ., எனும், 'அடிப்படை சேவை டிமேட் கணக்கு'களில் ஒருவர் வைத்திருக்கக் கூடிய கடன் மற்றும் கடன் அல்லாத பத்திரங்களின் உச்சவரம்பை, 10 லட்சம் ரூபாயாக 'செபி' உயர்த்தி அறிவித்தது
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், தாயகத்துக்கு அனுப்பும் பணத்தின் மதிப்பு, தொடர்ந்து இரண்டாவது நிதியாண்டாக, 100 பில்லியன் அமெரிக்க டாலர், அதாவது 8.30 லட்சம் கோடி ரூபாயை கடந்துள்ளது. கடந்த நிதியாண்டில் இவர்கள் அனுப்பிய தொகையின் நிகர மதிப்பு, 8.88 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
வரும் வாரம்
எச்.எஸ்.பி.சி., உற்பத்தி நிறுவனங்களின் பி.எம்.ஐ., குறியீடு, எச்.எஸ்.பி.சி., சேவை நிறுவனங்களின் பி.எம்.ஐ., குறியீடு, அன்னிய செலாவணி கையிருப்பு போன்ற இந்திய பொருளாதாரம் சார்ந்த சில தரவுகள், வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன.
ஐ.எஸ்.எம்., உற்பத்தி நிறுவனங்களின் பி.எம்.ஐ., குறியீடு, ஜே.ஓ.எல்.டி., வேலை வாய்ப்புகள் உருவான எண்ணிக்கை, ஏற்றுமதி- - இறக்குமதி நிகர நிலைமை, ஐ.எஸ்.எம்., சேவை நிறுவனங்களின் பி.எம்.ஐ., குறியீடு, விவசாயம் தவிர ஏனைய வேலை வாய்ப்புகள் நிலைமை, வேலையில்லாத நபர்களின் எண்ணிக்கை போன்ற சில அமெரிக்க பொருளாதாரம் சார்ந்த தரவுகளும் வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன.
கவனிக்க வேண்டியவை
கடந்த வாரம் திங்களன்று 36 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்த நிப்டி, செவ்வாயன்று 183 புள்ளிகள் ஏற்றத்துடனும்; புதனன்று வர்த்தக நாளின் இறுதி யில் 147 புள்ளிகள் ஏற்றத்துடனும்; வியாழனன்று 175 புள்ளிகள் ஏற்றத்துடனும்; வெள்ளியன்று 33 புள்ளிகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தது.
நிகழ்வுகள், செய்திகள் மற்றும் பொருளாதாரம் சார்ந்த தரவுகள் போன்றவை மட்டுமே நிப்டியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதாக இருக்கும்.எனவே, வர்த்தகர்கள் இவற்றில் கவனம் வைத்து எச்சரிக்கையுடன், மிகவும் குறைந்த எண்ணிக்கையில், நஷ்டத்தை குறைக்க உதவும், ஸ்டாப்லாஸ்களை உபயோகித்து வர்த்தகம் செய்வதற்கு முயற்சிக்கலாம்.
டெக்னிக்கல் அனாலிசிஸ் அளவீடுகளின் படி பார்த்தால், நிப்டியில் ஏற்றம் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதைப் போன்ற நிலைமையே தென்படுகின்றது. ஒருவேளை இறக்கம் வந்தால், வர்த்தகர்கள் நிதானித்து, நஷ்டம் குறைக்கும் ஸ்டாப்லாஸ்களை வைத்துக்கொண்டு செயல்பட வேண்டியிருக்கும்.
நிப்டியின் டெக்னிக்கல் அனாலிசிஸ் சார்ந்த தற்போதைய நிலவரம்
நிப்டி 23516, 23021 மற்றும் 22706 என்ற நிலைகளில் வாராந்திர ரீதியிலான ஆதரவையும்; 24340, 24669 மற்றும் 24984 என்ற நிலைகளில் வாராந்திர ரீதியிலான தடைகளையும் டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படையில் சந்திப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றது. நிப்டியில் ஏற்றம் தொடர்வதற்கு தற்சமயம் உருவாகியுள்ள முக்கிய டெக்னிக்கல் திருப்புமுனை அளவான 23845 என்ற அளவிற்கு கீழே செல்லாமல், தொடர்ந்து வர்த்தகமாகிக்கொண்டு இருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.