வர்த்தக தகவல் பரிமாற்றம் அசோசம் - சுவிஸ்மெம் கூட்டு
வர்த்தக தகவல் பரிமாற்றம் அசோசம் - சுவிஸ்மெம் கூட்டு
வர்த்தக தகவல் பரிமாற்றம் அசோசம் - சுவிஸ்மெம் கூட்டு
ADDED : ஜூன் 10, 2025 11:51 PM

புதுடில்லி:வர்த்தகம், முதலீடுகள் குறித்த தகவல்களை பரிமாறிக் கொள்வதற்காக, இந்தியாவின் அசோசம் மற்றும் சுவிட்சர்லாந்தின் சுவிஸ்மெம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
வர்த்தகம், முதலீடுகள் தொடர்பான தகவல்கள் மற்றும் பிரச்னைகளுக்கான தீர்வை பகிர்ந்து கொள்வதற்கு வசதியாக, இந்திய தொழில்துறை கூட்டமைப்பான அசோசம், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த தொழிற்கூட்டமைப்பான சுவிஸ்மெம் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக, தொழில்நுட்ப பரிமாற்றம், பொருளாதார ஒத்துழைப்பு, முதலீட்டு வாய்ப்புகள், வர்த்தக கண்காட்சிகள், கொள்கைகள், இருநாடுகளின் வெளிநாட்டு வர்த்தகம் தொடர்பான பொருளாதார சட்டங்கள் போன்ற துறைகளில் ஒத்துழைப்பதே நோக்கம் என தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
வர்த்தக பணிகள், திட்ட ஆய்வுக்குழுக்கள், இறக்குமதி, ஏற்றுமதி, வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவற்றுக்கு இந்த இரு தொழில்துறை கூட்டமைப்புகளும் ஒன்றுக்கொன்று தங்கள் ஆதரவை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ்மெம் என்பது, சுவிட்சர்லாந்தின் இயந்திரம் மற்றும் மின் பொறியியல் துறை சார்ந்த தொழில் கூட்டமைப்பாகும்.