மின்சார கார் சந்தை 4 சதவீதமாக அதிகரிப்பு
மின்சார கார் சந்தை 4 சதவீதமாக அதிகரிப்பு
மின்சார கார் சந்தை 4 சதவீதமாக அதிகரிப்பு
ADDED : ஜூன் 10, 2025 07:12 AM

புதுடில்லி : இந்திய பயணியர் கார் சந்தையில், மின்சார கார்களின் பங்கு 4.10 சதவீதமாக உயர்ந்து, புதிய மைல்கல்லை எட்டி உள்ளதாக, வாகன முகவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள மே மாத விற்பனை தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு மே மாதத்தில் விற்பனை 2.60 சதவீதமாகவும்; கடந்த ஏப்ரலில் 3.50 சதவீதமாகவும் இருந்தது.
கடந்த ஆண்டு மே மாதத்தில் 8,029 மின்சார கார்கள் விற்பனையான நிலையில், இந்த ஆண்டு இதே மாதத்தில் 12,304 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. டாடா மோட்டார்ஸ் நிறுவனம், 4,351 மின்சார கார்களை விற்பனை செய்து முதல் இடத்தில் நீடிக்கிறது.
அதை தொடர்ந்து, 3,765 கார்களை விற்பனை செய்து, எம்.ஜி., மோட்டார்ஸ் நிறுவனம் இரண்டாம் இடத்திலும், 2,632 கார்களை விற்பனை செய்து, மஹிந்திரா மூன்றாவது இடத்திலும் உள்ளன. மொத்தம் விற்பனையான மின்சார கார்களில், இந்த மூன்று நிறுவனங்களின் சந்தை பங்கு மட்டும் 87 சதவீதம்.