ரயில் சக்கரங்கள் தயாரிப்பில் திதாகர் ரயில் சிஸ்டம்ஸ்
ரயில் சக்கரங்கள் தயாரிப்பில் திதாகர் ரயில் சிஸ்டம்ஸ்
ரயில் சக்கரங்கள் தயாரிப்பில் திதாகர் ரயில் சிஸ்டம்ஸ்
ADDED : ஜூன் 10, 2025 11:54 PM

கொல்கட்டா:திதாகர் ரயில் சிஸ்டம்ஸ் நிறுவனம், ராமகிருஷ்ணா போர்ஜிங்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, ரயில் சக்கரங்கள் தயாரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. உள்நாட்டில் ரயில் சக்கரங்கள் தேவை அதிகரிப்பால், இந்த தொழிலில் நுழைந்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
திதாகர் நிறுவனம், ரயில் பெட்டிகள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. மாதத்துக்கு 1,000 ரயில் பெட்டிகளைத் தயாரிக்க இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், பெங்களூருவில் உள்ள ரயில் வீல் பேக்டரியில் ஏற்பட்டுள்ள வினியோக சிக்கல்களால், தயாரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நம் நாட்டின் ரயில் சக்கர தேவையை சமாளிக்கவும், மத்திய அரசின் தன்னிறைவடைந்த இந்தியா திட்டத்தை வலுப்படுத்தவும், ரயில் சக்கர தயாரிப்பில் இறங்கியுள்ளதாக திதாகர் நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்த நிதியாண்டில் தயாரிப்பு ஆலையில் உற்பத்தி துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு தயாரிக்கப்படவுள்ள சக்கரங்கள், ஆரம்பகட்டமாக இந்திய ரயில்வே மற்றும் மெட்ரோ ரயில்களுக்கு வழங்கப்படும் என்றும், இதன் பிறகு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வேக்கு ஆண்டுக்கு 20 லட்சத்துக்கும் கூடுதலான சக்கரங்கள் தேவைப்படுகிறது
சீனா, உக்ரைன், ரஷ்யாவிலிருந்து அதிகளவிலான ரயில் சக்கரங்கள் இறக்குமதி