ரூ.2,903 கோடிக்கு ஆர்டர் பெற்றது டி.சி.எஸ்.,
ரூ.2,903 கோடிக்கு ஆர்டர் பெற்றது டி.சி.எஸ்.,
ரூ.2,903 கோடிக்கு ஆர்டர் பெற்றது டி.சி.எஸ்.,
ADDED : மே 21, 2025 11:43 PM

புதுடில்லி:பொதுத்துறையைச் சேர்ந்த பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திடமிருந்து 2,903 கோடி ரூபாய்க்கு, கூடுதலாக ஆர்டரை பெற்று உள்ளதாக டி.சி.எஸ்.,நிறுவனம் தெரிவித்துள்ளது.
பங்குச்சந்தையில் நேற்று தாக்கல் செய்த அறிக்கையில், டி.சி.எஸ்., நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
நாடு முழுதும் 18,685 இடங்களில், 4ஜி மொபைல் நெட்வொர்க் வினியோகம் செய்தல், நிறுவுதல் மற்றும் பராமரிப்புக்காக பி.எஸ்.என்.எல்.,லிடம் இருந்து 2,903.22 கோடி ரூபாய்க்கான கூடுதல் ஆர்டர் கிடைத்துள்ளது. இதற்கான, நிபந்தனைகள் மற்றும் ஆவணங்கள் அடங்கிய விரிவான ஆர்டரை உரிய நேரத்தில் பி.எஸ்.என்.எல்., நிறுவனம் வழங்கும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.
நாடு முழுதும் 4ஜி நெட்வொர்க் சேவை வழங்குவதற்காக, கடந்த 2013ல் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திடம் இருந்து 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டரை பெற்று இருந்தது.
டாடா குழுமத்தை சேர்ந்த தேஜஸ் நெட்வொர்க், டி.சி.எஸ்., நிறுவனத்துக்கு இதற்கான உபகரணங்கள் வினியோகம் மற்றும் சேவையை அளித்து வருகிறது.