தொழில் துவங்க அனுமதிப்பதில் ஒற்றைச்சாளர முறை தாமதம்
தொழில் துவங்க அனுமதிப்பதில் ஒற்றைச்சாளர முறை தாமதம்
தொழில் துவங்க அனுமதிப்பதில் ஒற்றைச்சாளர முறை தாமதம்
ADDED : மே 21, 2025 11:06 PM

சென்னை:தமிழகத்தில் பெரிய தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் பணிகளை, தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம் மேற்கொள்கிறது. தொழில் துவங்க அரசின் பல்வேறு துறைகளிடம் அனுமதி பெற வேண்டியுள்ளது.
எனவே, ஒற்றைச்சாளர இணையதளம் வாயிலாக, தொழில் பாதுகாப்பு உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட அரசு துறைகளின், 191 வணிகம் தொடர்பான அனுமதி, ஒப்புதல், தடையில்லா சான்று உள்ளிட்டவை ஒரே இடத்தின் கீழ் பெறும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
இந்த இணையதளத்தை, வழிகாட்டி நிறுவனம் நிர்வகிக்கிறது. ஒவ்வொரு சேவைக்கும் குறிப்பிட்ட காலத்திற்குள் அனுமதி அளிக்கும் வகையில், அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது. இருப்பினும், அதிகாரிகளால் தாமதம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து, தொழில் துறையினர் கூறியதாவது:
தாமதம் குறித்து புகார் அளித்தால், சம்பந்தப்பட்ட துறையை அணுகுமாறு கூறுகின்றனர். ஒற்றைச்சாளர இணையதளத்தின் வேகத்தையும் அதிகப்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாதமும் எத்தனை விண்ணப்பங்கள் பெறப்பட்டன; அதில் எத்தனை அனுமதி அளிக்கப்பட்டது என்ற விபரத்தை வெளியிட வேண்டும். அப்போது தான் அனுமதி அளிப்பதில் வெளிப்படை தன்மை ஏற்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.