'டேன்90' நிறுவனம் ரூ.20 கோடி நிதி திரட்டியது
'டேன்90' நிறுவனம் ரூ.20 கோடி நிதி திரட்டியது
'டேன்90' நிறுவனம் ரூ.20 கோடி நிதி திரட்டியது
ADDED : மே 21, 2025 11:13 PM

சென்னை:சென்னையைச் சேர்ந்த 'டீப்டெக் ஸ்டார்ட்அப்' நிறுவனமான 'டேன்90 தெர்மல் சொல்யூஷன்ஸ்' 20 கோடி ரூபாய் நிதியை திரட்டியுள்ளது. இதை, 'நப்வெஞ்சர்ஸ்' தலைமையிலான நிதி சுற்றின் வாயிலாக திரட்டிஉள்ளது.
இதில், 'புளூ அஷ்வா கேபிடல், கேபிடல் - ஏ, 3ஐ பார்ட்னர்ஸ்' ஆகிய நிறுவனங்கள் இடம் பெறுகின்றன.
சுகாதாரம், உணவு, விவசாயம், உற்பத்தி துறைகளில் ஆற்றல் திறன், காலநிலைக்கு ஏற்ப குளிரூட்டும் தீர்வை டேன்90 தெர்மல் சொல்யூஷன்ஸ் வழங்குகிறது. தற்போது திரட்டியுள்ள நிதியை அந்நிறுவனம், விரிவாக்க திட்டங்களுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.