ரயில்வே சரக்கு போக்குவரத்து வருவாய் ரூ.1.25 லட்சம் கோடி
ரயில்வே சரக்கு போக்குவரத்து வருவாய் ரூ.1.25 லட்சம் கோடி
ரயில்வே சரக்கு போக்குவரத்து வருவாய் ரூ.1.25 லட்சம் கோடி
ADDED : ஜன 05, 2024 11:57 PM

புதுடில்லி:நடப்பு நிதியாண்டில் இதுவரை, ரயில்வேயின் சரக்கு போக்குவரத்துக்கான வருவாய் கடந்த நிதியாண்டைவிட 4,627 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
இந்திய ரயில்வேயின் சரக்கு போக்குவரத்து வாயிலாக, கடந்த நிதியாண்டின் ஏப்ரல் - டிசம்பர் காலகட்டத்தில், 1.20 லட்சம் கோடி ரூபாயாக இருந்த வருவாய், நடப்பு நிதியாண்டு இதே காலகட்டத்தில், 4,627 கோடி ரூபாய் அதிகரித்து, 1.25 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
ஒட்டு மொத்தமாக, கடந்த நிதியாண்டின் மதிப்பீட்டு காலத்தில் 110.9 கோடி டன் சரக்கு போக்குவரத்து நடந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் இதே காலகட்டத்தில், 452.8 டன் அதிகரித்து 115.5 கோடி டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன.
கடந்த நிதியாண்டின் டிசம்பரில் 13.06 கோடி டன்னில் இருந்து, நடப்பு நிதியாண்டின் டிசம்பரில் 6.37 சதவீதம் அதிகரித்து 13.89 கோடி டன்னாக சரக்கு கையாளுகை உயர்ந்துள்ளது.
மதிப்பீட்டளவில், கடந்தாண்டு டிசம்பரில் 14,574 கோடி ரூபாயாக இருந்த வருவாய், நடப்பாண்டு டிசம்பரில் 3.59 சதவீதம் அதிகரித்து 15,098 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.