டேங்கர் கப்பல் வருகைக்கு அனுமதி மறுப்பு அதானி முடிவால் மத்திய அரசுக்கு சிக்கல்?
டேங்கர் கப்பல் வருகைக்கு அனுமதி மறுப்பு அதானி முடிவால் மத்திய அரசுக்கு சிக்கல்?
டேங்கர் கப்பல் வருகைக்கு அனுமதி மறுப்பு அதானி முடிவால் மத்திய அரசுக்கு சிக்கல்?
UPDATED : செப் 14, 2025 12:34 AM
ADDED : செப் 14, 2025 12:33 AM

புதுடில்லி:அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் தடை விதிக்கப்பட்ட டேங்கர் கப்பல்களுக்கு அதானி துறைமுகங்கள் அனுமதி மறுப்பால், கச்சா எண்ணெய் வந்து சேர்வது பாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
இந்தியாவின் முந்த்ரா உள்ளிட்ட 15 முன்னணி துறைமுகங்களை, அதானி குழுமத்தின் அதானி போர்ட்ஸ் அண்டு ஸ்பெஷல் ஜோன் நிறுவனம் இயக்கி வருகிறது.
![]() |
அமெரிக்காவின் அன்னிய சொத்துக்கள் கட்டுப்பாட்டு அலுவலகம், ஐரோப்பிய யூனியன், பிரிட்டன் ஆகியவை தடை விதித்துள்ள சரக்கு கப்பல்களை, தனது கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகங்களில் அனுமதிக்க இயலாது என, அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால், ரஷ்யாவில் இருந்து இந்திய எண்ணெய் நிறுவனங்களால் இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயுடன் கப்பல்கள், அதானி துறைமுகங்களில் நிறுத்தப்பட இயலாது என்பதால், கச்சா எண்ணெய் வருகை பாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
கடந்த சில ஆண்டுகளில், மஹாராஷ்டிராவின் முந்த்ரா துறைமுகத்தில் தினசரி 4 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்கள் பெறப்பட்ட நிலையில், நாட்டின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் அது 50 சதவீத பங்கு வகித்தது.
தற்போது விதிக்கப்பட்டுள்ள தடையால், கச்சா எண்ணெய் இறக்குமதியில் அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
![]() |