ரூ.1,000 கோடி முதலீடை ஈர்த்த 'சிப்காட்' உணவு பூங்காக்கள்
ரூ.1,000 கோடி முதலீடை ஈர்த்த 'சிப்காட்' உணவு பூங்காக்கள்
ரூ.1,000 கோடி முதலீடை ஈர்த்த 'சிப்காட்' உணவு பூங்காக்கள்
UPDATED : மே 22, 2025 09:33 AM
ADDED : மே 21, 2025 11:40 PM

சென்னை:விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், திருச்சி மணப்பாறை மற்றும் தேனியில், 'சிப்காட்' நிறுவனம் அமைத்துள்ள மாபெரும் உணவு பூங்காக்களில் இதுவரை, 16 நிறுவனங்கள் வாயிலாக 1,025 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உணவு பொருட்கள் சார்ந்த உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தொழில் துவங்குவதை ஊக்குவிக்க, மணப்பாறையில் 138 ஏக்கரிலும், திண்டிவனத்தில் 158 ஏக்கரிலும், தேனியில் 124 ஏக்கரிலும், சிப்காட் எனப்படும் தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனம், உணவு பூங்காக்களை உருவாக்கியுள்ளது.
![]() |
இந்த பூங்காக்களில் சேமிப்பு கிடங்கு, குளிர்பதன கிடங்கு, விரைவாக குளிர்விக்கும் வசதி, ஆய்வகத்தை உள்ளடக்கிய பொது வசதி மையங்களை சிப்காட் ஏற்படுத்த உள்ளது. இதனால், இந்த வசதிகளுக்காக அதிக தொகையை முதலீடு செய்யாமல், குறைந்த செலவில் தொழில் நிறுவனங்கள் பயன் பெற முடியும்.
திண்டிவனம், தேனி தொழில் பூங்காக்களில் உள்ள மனைகள் 50 சதவீதம் மற்றும் மணப்பாறை பூங்கா மனைகள் 10 சதவீதம் தள்ளுபடி விலைகளில் வழங்கப்படுகின்றன.
இந்த மூன்று பூங்காக்களிலும் இதுவரை, 16 தொழில் நிறுவனங்கள் வாயிலாக 1,025 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.