ரூ.5 கோடி நிதி திரட்டியது ஜூப்பா ட்ரோன்
ரூ.5 கோடி நிதி திரட்டியது ஜூப்பா ட்ரோன்
ரூ.5 கோடி நிதி திரட்டியது ஜூப்பா ட்ரோன்
ADDED : மே 21, 2025 11:32 PM

சென்னை:சென்னையை சேர்ந்த ட்ரோன் உற்பத்தி ஸ்டார்ட்அப் நிறுவனமான ஜூப்பா, 5 கோடி ரூபாய்க்கு முதலீடு பெற்றுள்ளது. இது, நிறுவன செயல்பாடுகளை வேகப்படுத்தி, அஜீத் சிரீஸ் தற்கொலை ட்ரோன்களின் உற்பத்தியை அதிகரிக்க பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதம் 31ம் தேதிக்குள் 10 கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்ட இந்நிறுவனம் இலக்கு வைத்துள்ளது.
அஜீத் சீரீஸ் ட்ரோன், இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் தற்கொலை ட்ரோன் என கூறப்படுகிறது. இந்த வகை ட்ரோன், மலைப் பிரதேசங்களிலும், உயரமான பகுதிகளிலும், தாக்குதல் அல்லது கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும்.
இந்த நிறுவனம், 2012ல் இருந்து செயல்பட்டு வருகிறது. இதுவரை, 150க்கும் அதிகமான ட்ரோன்கள், ராணுவத்திற்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளன.