இந்தியாவுக்கு உரம் விற்க சீனா தடை
இந்தியாவுக்கு உரம் விற்க சீனா தடை
இந்தியாவுக்கு உரம் விற்க சீனா தடை
ADDED : ஜூன் 27, 2025 01:19 AM

புதுடில்லி:அரிய வகை காந்தங்களைத் தொடர்ந்து, இந்தியாவுக்கான சிறப்பு உர ஏற்றுமதியையும் சீனா நிறுத்தியுள்ளது.
அதிகாரப்பூர்வமாக தடை விதிக்கப்படவில்லை என்றாலும், நம் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய உரங்களை ஆய்வு செய்வதை நிறுத்தியுள்ளது. ஆய்வுக்கு உட்படுத்தப்படாமல் ஏற்றுமதி செய்ய முடியாது என்பதால், கடந்த இரண்டு மாதங்களாகவே அறிவிக்கப்படாத தடை அமலில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொட்டாஷ் உள்ளிட்ட இந்த சிறப்பு உரங்கள், உயர்தரமான பழங்கள் மற்றும் காய்கறிகளின் விளைச்சலை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. இந்தியா தவிர்த்து பிற நாடுகளுக்கு இதன் ஏற்றுமதி தொடர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் சிறப்பு உரத் தேவைகளில் கிட்டத்தட்ட 80 சதவீதம், சீனாவிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது.
இந்தியாவுக்கான சிறப்பு உர ஏற்றுமதிகளுக்கு சீன அதிகாரிகள் கடந்த சில ஆண்டுகளாகவே கட்டுப்பாடுகளை விதித்து வந்தாலும், இம்முறை முழுமையான தடையாக மாறியுள்ளதாக, தொழில்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.
தற்போதுள்ள நடைமுறைகள் சீன இறக்குமதிக்கு சாதகமாக இருப்பதாகவும், பல உரிமங்கள் பெற வேண்டியுள்ளதால் தாங்கள் சிரமத்துக்கு ஆளாவதாகவும் உர இறக்குமதியாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.