ADDED : ஜூன் 26, 2025 01:47 AM

வங்கிகள், நிதி நிறுவனங்கள் தங்களுக்கு இடையே பணப்புழக்கத்தை நிர்வகிக்க உதவும், 'கால் மனி' எனப்படும், குறுகிய கால கடன் சந்தையின் வர்த்தக நேரத்தை, இரண்டு மணி நேரம் நீட்டித்து, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு உள்ளது.
வரும் ஜூலை 1 முதல் இந்த மாற்றம் அமலுக்கு வருகிறது. இதன்படி, காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை, வங்கிகள் ரொக்க தொகையை பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்.
மேலும், சந்தை ரெப்போ மற்றும் மூன்றாம் தரப்பு ரெப்போ வர்த்தக நேரம், ஆக., 1 முதல் மாலை 4 மணி வரை, நீட்டிக்கப்பட்டு உள்ளது.