வாஷிங்மெஷின், பிரிஜ் உற்பத்தி கைவிடுகிறது பானாசோனிக்
வாஷிங்மெஷின், பிரிஜ் உற்பத்தி கைவிடுகிறது பானாசோனிக்
வாஷிங்மெஷின், பிரிஜ் உற்பத்தி கைவிடுகிறது பானாசோனிக்
ADDED : ஜூன் 27, 2025 01:23 AM

புதுடில்லி:வாங்க ஆளில்லாததால் இந்தியாவில் வாஷிங்மெஷின், பிரிஜ் தயாரிப்பை நிறுத்த உள்ளதாக, பானாசோனிக் இந்தியா அறிவித்துள்ளது.
ஜப்பானைச் சேர்ந்த பானாசோனிக் நிறுவனம், இந்தியாவில் பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பு, விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த ஆறு ஆண்டுகளாக வாஷிங்மெஷின், பிரிஜ் தயாரிப்புகள் நஷ்டத்தை சந்தித்து வந்ததுடன், சந்தை பங்களிப்பும் குறைந்ததால், அதன் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளதாக, 'பானாசோனிக் லைப் சொல்யூசன்ஸ் இந்தியா' தெரிவித்துள்ளது.
மேலும் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவில் பிற வீட்டு உபயோக பொருட்களான, வணிக ரீதியிலான மற்றும் வீடுகளுக்கான ஏர் கண்டிஷனர்கள், எல்.இ.டி., டிவி, மைக்ரோவேவ் மற்றும் மின்சார பொருட்கள் தயாரிப்புகள் வழக்கம் போல் தொடரும்.
உற்பத்தி நிறுத்தப்பட்டாலும், டீலர்களிடம் கையிருப்பில் உள்ள பிரிஜ், வாஷிங்மெஷின்கள் விற்பனையாகும் வரை, அவற்றுக்கு முழுமையான வாடிக்கையாளர் சேவை, உதிரிபாகங்கள், வாரன்டி ஆகியவை வழங்கப்படும்.
இவ்வாறு தெரிவித்து உள்ளது.