சென்னை விஸ்டியான் ஆலை கார் கேமரா உற்பத்தி துவக்கம்
சென்னை விஸ்டியான் ஆலை கார் கேமரா உற்பத்தி துவக்கம்
சென்னை விஸ்டியான் ஆலை கார் கேமரா உற்பத்தி துவக்கம்
ADDED : ஜூன் 06, 2025 01:17 AM

சென்னை:வாகன உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் அமெரிக்காவின் விஸ்டியான் நிறுவனத்தின் சென்னை ஆலையில், கார் கேமராக்கள் மற்றும் டிஸ்ப்ளே லைட்டுகளின் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் ஆலை, மறைமலை நகரில் அமைந்துள்ளது.
இதற்காக, இந்த ஆலை 85 கோடி ரூபாய் மதிப்பில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 1.3 முதல் 8 மெகாபிக்சல் வரை அதிக தெளிவு உள்ள எச்.டி., கேமராக்கள் இங்கு தயாரிக்கப்படுகின்றன.
அடாஸ் பாதுகாப்பு முதல், கார் பார்க்கிங் வரை, இந்த கேமராக்களை பயன்படுத்த முடியும். இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், இன்போடெயின்மென்ட் அமைப்புகளில் பயன்படுத்தப்படும் பின்புற லைட்டுகளும் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்த நிறுவனம், உலக அளவில் 17 நாடுகளில் இயங்கி வருகிறது. வாகன கேபின் மின் உபகரணங்கள் மற்றும் ஸ்மார்ட் போன் இணைப்பு தீர்வுகளை வழங்கி வருகிறது.