சிப் தயாரிக்க சிறப்பு மண்டலம் தாராளம் காட்டுகிறது மத்திய அரசு
சிப் தயாரிக்க சிறப்பு மண்டலம் தாராளம் காட்டுகிறது மத்திய அரசு
சிப் தயாரிக்க சிறப்பு மண்டலம் தாராளம் காட்டுகிறது மத்திய அரசு
ADDED : ஜூன் 06, 2025 01:19 AM

புதுடில்லி:சிப், மின்னணு உபகரணங்கள் தயாரிப்பை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக, அவற்றுக்கான சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்கான குறைந்தபட்ச நிலத்தின் அளவை மத்திய அரசு தளர்த்தியுள்ளது.
முன்னர் குறைந்தபட்சம் 50 ஹெக்டேர் நிலம் தேவை என்பதை, தற்போது 10 ஹெக்டேராக குறைத்துள்ளது.
மத்திய வர்த்தக அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிக்கை:
செமிகண்டக்டர் அல்லது மின்னணு உபகரணங்கள் தயாரிப்புக்காக, பிரத்யேகமாக சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்கான குறைந்தபட்ச நிலத்தின் அளவானது 10 ஹெக்டேர் அல்லது அதற்கு மேல் இருக்கலாம்.
மின்னணு உபகரணங்கள் என்பதில் டிஸ்பிளே, கேமரா மற்றும் பேட்டரி ஒருங்கிணைத்தல் ஆகியவையும், பல்வேறு வித துணை பொருட்களான பிரின்டட் சர்க்கியூட் போர்டு, லித்தியம் அயன் செல்கள், மொபைல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்புடைய ஹார்டுவேர் உபகரணங்களை ஒருங்கிணைத்தல் உள்ளிட்டவையும் அடங்கும்.
மேலும், சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு அனுமதி வழங்கும் ஒப்புதல் குழு, சிப், மின்னணு உபகரணங்கள் தயாரிப்பாளர்களுக்கு வில்லங்கம் இல்லாத நிலமாக இருக்க வேண்டும் என்ற விதியிலும் தளர்வு வழங்கியுள்ளது.
அதாவது, குறிப்பிட்ட நிலமானது, மத்திய அல்லது மாநில அரசு அல்லது அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திற்கு அடமானம் வைக்கப்பட்டதாகவோ அல்லது குத்தகைக்கு விடப்பட்டதாகவோ இருக்கலாம்.