ADDED : ஜூன் 06, 2025 01:09 AM

84%
கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்தியாவின் உள்நாட்டு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் நுகர்வானது 84 சதவீதம் அதிகரித்து, 2024- - 25ம் நிதியாண்டில் 48 லட்சம் டன்னை எட்டியிருப்பதாக இந்திய ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மேம்பாட்டு கூட்டமைப்பான 'இஸ்டா' தெரிவித்துள்ளது. அடிப்படை கட்டமைப்பு, ரயில் மற்றும் கட்டுமான துறைகள் அதிகளவில் ஸ்டீலை பயன்படுத்தி உள்ளன.
இதே காலத்தில் தனிநபர் நுகர்வானது, 2.5 கிலோவில் இருந்து 3.4 கிலோவாக அதிகரித்து உள்ளது.
25%
'பியூச்சர் ஜெனரலி இந்தியா இன்சூரன்ஸ்' நிறுவனத்தின் 24.91 சதவீத பங்குகளை, 451 கோடி ரூபாய்க்கு சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வாங்கிஉள்ளதாக அவ்வங்கி தெரிவித்துள்ளது.
இந்த கையகப்படுத்துதல் வாயிலாக சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, காப்பீட்டு துறையில் நுழைகிறது. இதற்கான ஒப்புதலை, இந்திய சந்தை போட்டி ஆணையம், இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் ரிசர்வ் வங்கியிடம் பெற்றுள்ளது.